Advertisment

குஜராத் விமான நிலையத்திற்கு வந்த டெல்லி முதலமைச்சர்; ‘மோடி மோடி’ என கத்திய பா.ஜ.க.வினர்

BJP opposition to Chief Minister Arvind Kejriwal who arrived at the airport!

குஜராத் மாநிலம், வதோதரா சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பா.ஜ.க.வினர் மோடி, மோடி என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, வதோதராவில் நடைபெறும் தேர்தல் பரப்புரைகூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் குஜராத் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, வதோதரா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சூழ்ந்த பா.ஜ.க.வினர், மோடி, மோடி என முழக்கமிட்டு விரட்ட முயற்சித்தனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தன்னை இழிவுபடுத்துவதில் பா.ஜ.க.வும், காங்கிரஸும் ஒற்றுமையுடன் செய்லபடுவதாக குற்றம்சாட்டினார்.

Delhi Gujarat
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe