/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a (5)_2.jpg)
மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் முகுல் ராய். மத்திய ரயில்வே அமைச்சராகவும் பணியாற்றியுள்ள இவர், கடந்த 2017ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பிறகு அவர் பாஜகவின் தேசிய துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில், இன்று (11.06.2021) இவர்தனது மகனோடு மீண்டும் திரிணாமூல் காங்கிரஸில் இணைகிறார். பாஜகவில் தான் ஓரங்கட்டப்படுவதாக அவர் நினைத்ததாலும், மேற்கு வங்கசட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததையொட்டியும்முகுல் ராய் பாஜகவில் இருந்து விலகி திரிணாமூலில்மீண்டும் இணைவதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும், சமீபத்தில் நடந்த மேற்கு வங்கதேர்தலின்போதுதிரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பலரும் மீண்டும் திரிணாமூல்காங்கிரஸிற்குத் திரும்பவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)