
பா.ஜ.க.வின் தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.
பா.ஜ.க.வில்இன்றுதேசிய துணைத் தலைவர்,பொதுச் செயலாளர்கள், இணையதள இளைஞர் பிரிவு பலதரப்பட்டநிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நிர்வாகிகள் பட்டியலை,வசுந்தரா ராஜே இன்று வெளியிட்டுள்ளார். ராஜே சிந்தியா, ராதா மோகன் சிங்ஆகியோர் பா.ஜ.க தேசிய துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தெற்கு பெங்களூரு எம்.பி தேஜஸ்வி சூர்யா பாஜக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்ததேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. ஏற்கனவே தேசிய அளவில் பொறுப்பில் இருந்தஹெச்.ராஜா உள்ளிட்டோருக்கும் தேசிய அளவிலான பொறுப்பு மீண்டும் வழங்கப்படவில்லை.
Follow Us