Advertisment

இடைத்தேர்தல் தோல்விகள் குறித்து நாளை ஆராயும் பாஜக!

Advertisment

bjp

மத்தியில் ஆளுங்கட்சியான பாஜகவின் செயற்குழு கூட்டம், கரோனாகாரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடைபெறாமல்இருந்துவந்தது. இந்தச் சூழலில்கடந்த மாதம் அக்கட்சியின் செயற்குழு மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில், பாஜகவின் செயற்குழு கூட்டம் நாளை (07.11.2021) நடைபெறவுள்ளது.

Advertisment

இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தொடக்கவுரை நிகழ்த்தவுள்ளார். பிரதமர் மோடியின் உரையுடன் இந்தக் கூட்டம் நிறைவடையவுள்ளது. பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் ஆகியோர் பங்கேற்கும் இந்தச் செயற்குழு கூட்டத்தில், பல்வேறு மாநில இடைத்தேர்தலில்களில்பாஜக சந்தித்த தோல்வி குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில், 100 கோடி தடுப்பூசி டோஸ்கள்செலுத்தப்பட்டது. எரிபொருள் விலை குறைப்பு, வெற்றிகரமான வெளிநாட்டு பயணங்கள் ஆகியவற்றுக்காக பிரதமர் மோடியைப் பாராட்டி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

jp nadda Narendra Modi
இதையும் படியுங்கள்
Subscribe