கட்டிபிடி பயத்தால் என்னை பார்த்து பாஜக எம்.பி.க்கள் 2 அடி தள்ளி செல்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisment

பாராளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த விவாதத்தில் மத்திய அரசையும், மோடியையும் கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்நிலையில், டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மக்களவையில் பிரதமர் மோடியை கட்டிபிடித்த நிகழ்வை சுட்டிகாட்டி பேசிய ராகுல்காந்தி,

Advertisment

நான் கட்டிபிடிப்பேன் என நினைத்து என்னை பார்த்ததும் பாஜக எம்.பிக்கள் 2 அடி தள்ளி செல்கின்றனர். பிரதமர் மோடியையும், பாஜகவையும் காங்கிரஸ் எதிர்க்கும் ஆனால் வெறுக்காது. வெறுப்புடன் இருக்கக்கூடாது என்று மதம் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது.