Advertisment

கரோனாவால் பாஜக எம்.பி மரணம் - பிரதமர் இரங்கல்!

NAND KUMAR SINGH CHAUHAN

மத்தியப் பிரதேசமாநிலம்,கண்ட்வாதொகுதியின் நாடாளுமன்றஉறுப்பினர்நந்த்குமார் சிங் சவுகான். பாஜகவைச் சேர்ந்தஇவரின்உடல்நிலை சிலநாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்குக் கரோனாதொற்று உறுதியானது. இதனையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (02.03.2021) அவர் மரணமடைந்தார்.

Advertisment

நந்த்குமார் சிங் சவுகான்மறைவுக்குஇரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "கண்ட்வாவைச் சேர்ந்தமக்களவை உறுப்பினர் ஸ்ரீ நந்த்குமார் சிங் சவுகான் ஜி மறைவால்வேதனையடைந்தேன். பாராளுமன்ற நடவடிக்கைகளில் அவரதுபங்களிப்பு, அவரின் ஒருங்கிணைப்புத் திறன்கள் மற்றும் மத்தியப் பிரதேசம் முழுவதும் பாஜகவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி" எனக் கூறியுள்ளார்.

Advertisment

MadhyaPradesh LOK SABHA MPs
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe