சமீபத்தில் ஒரு தனியார் டிவியில் பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் நிதி கட்காரி, ”நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் நாங்கள் பல வாக்குறுதிகளை தெரிவித்தோம். இறுதியில் நாங்கள் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டோம். தேர்தலில் வெற்றிபெற்றதனால்தான் மக்கள் வாக்குறுதிகளை நியாபகம் வைத்திருக்கிறார்கள். அவர்கள் எங்களிடம் வாக்குறுதிகள் பற்றி கேள்வி எழுப்பினால் சிரித்துகொண்டே அவர்களை கடந்து விடுவோம் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு இவர் பேசியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை காங்கிரஸ் கட்சி தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,”நீங்கள் கூறியவை அனைத்தும் சரியே” என்று தெரிவித்துள்ளார்.