akbar

Advertisment

எம்.ஜே அக்பர் தற்போது வெளியுறவு இணை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். பாஜகவைச் சேர்ந்த இவர் முன்பு பத்திரிகையாளராக பல வருடங்கள் பணியாற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அச்சமயத்தில் இவருடன் பணியாற்றிய பெண் பத்திரிகையாளர்களிடம் எம்.ஜே. அக்பர் பாலியல் தொந்தரவுகள் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், இதுதொடர்பாக பாஜக மவுனம் காட்டக்கூடாது. விரைவில் பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த மேனகா கந்தியும் இவ்விவகாரத்திற்கு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

இதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ப்பால் ரெட்டி பேசுகையில், “எம்.ஜே அக்பர் இதற்கு பதிலளிக்க வேண்டும் இல்லையெனில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.