Advertisment

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும்போது தீவிபத்து... பாஜக எம்.பி. பேத்தி உயிரிழப்பு...

bjp mp granddaughter passes away in diwali fire accident

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தீவிபத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரீட்டா பாகுனா ஜோஷியின் பேத்தி உயிரிழந்துள்ளதுள்ளார்.

Advertisment

பாஜகவை சேர்ந்த ப்ரயாக்ராஜ் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரான ரீட்டா பாகுனா ஜோஷியின் ஆறு வயது பேத்தி, தீபாவளி இரவு, தனது வீட்டின் மொட்டை மாடியில் மற்ற குழந்தைகளுடன் விளையாட சென்றுள்ளார். அப்போது அவரது ஆடையில் பட்டாசு காரணமாக தீப்பிடித்துள்ளது. பட்டாசுகளின் சத்தம் காரணமாக, வீட்டின் கீழே இருந்தவர்களுக்கு சிறுமியின் சத்தம் கேட்கவில்லை. பின்னர், சிறிது நேரம் கழித்து அங்கு சென்ற ஒருவர், சிறுமி உடல் எறிந்த நிலையில் இருப்பதைக் கண்டுள்ளார்.

Advertisment

இதனையடுத்து, சிறுமி உடனடியாக சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், 60 சதவீத தீக்காயங்களுடன் இருந்த சிறுமிக்கு சிகிச்சையளிக்க, டெல்லி ராணுவ மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடிவெடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரைத் தொடர்புகொண்ட ரீட்டா பாகுனா, விமான ஆம்புலன்ஸ் மூலம் தனது பேத்தியை டெல்லிக்கு கொண்டுசெல்ல ஏற்பாடு செய்தார். ஆனால், டெல்லிக்கு அழைத்து வரப்படுவதற்கு முன்பே, வழியில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

Prayagraj diwali uttarpradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe