Advertisment

சர்க்கரை வியாதியிலிருந்து தப்பிக்க இப்படி ஒரு வழியா..? பாஜக எம்.பி யின் பேச்சு...

பாஜக எம்.பி கணேஷ் சிங்கின் பேச்சு இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.

bjp mp ganesh singh claims speaking sanskrit will cure diabetics

நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற பாஜக எம்.பி கணேஷ் சிங், "அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஆய்வின்படி, சமஸ்கிருதத்தில் கணினி புரோகிராம்கள் உருவாக்கப்பட்டால், அது குறைபாடற்றதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல அமெரிக்கா கல்வி நிறுவனம் ஒன்றுமேற்கொண்ட ஆய்வின்படி, சமஸ்கிருத மொழியை தினசரி பேசுவது நரம்பு மண்டலத்தை நன்கு இயங்க வைப்பதோடு, நீரிழிவையும் நம்மிடமிருந்து தள்ளிவைக்கிறது. அதேபோல கொழுப்பு வியாதிகளையும் நம்மிடமிருந்து விலக்கி வைக்கிறது" என்று கூறினார். சமஸ்கிருதத்திற்கும், சர்க்கரை வியாதிக்கும் தொடர்புள்ளது என்ற அவரது பேச்சு இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

Advertisment

Diabetics sanskrit weird
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe