பாஜகவைச் சேர்ந்தநாடாளுமன்ற உறுப்பினர் கிர்ரான் கெர். சண்டிகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், பிரபல இந்தி நடிகர்அனுபம் கெர்ரின்மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில்68 வயதான கிர்ரான் கெர், இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தனதுமனைவிக்கு இரத்த புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ள அனுபம் கெர், கிர்ரான் கெர்ருக்குத் தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் இதிலிருந்துவலிமையுடன் மீண்டு வருவார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அனைவரதுஅன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.