BJP MLA's controversial speech about Elephants in karnataka

Advertisment

கர்நாடகா மாநிலத்தில், தற்போது சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், பெல்தங்கடி தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரிஷ் பூஞ்சா, மாநில அரசுக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, “விவசாயிகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நாம் யானைகளை துப்பாக்கியால் சுட வேண்டும். யானைகளின் தொல்லைகளால், விவசாயிகள் தூக்கல் இல்லாமல் தவிக்கின்றனர். இந்த குழப்பத்துக்கு நான் நிரந்தர தீர்வைக் காண வேண்டும்” என்று கூறினார். பா.ஜ.க எம்.எல்.ஏவின் இந்த பேச்சை கேட்ட மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே, “ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு இத்தகைய கருத்துக்களை நீங்கள் தெரிவிக்கக் கூடாது. இது மிகவும் துர்திர்ஷ்டவசமானது. ஒரு சட்டம் இருக்கிறது. எம்.எல்.ஏவாகிய நீங்கள் தான், அந்த சட்டம் என்ன என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்” என்று கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து கர்நாடகா சபாநாயகர் யு.டி. காதர் கூறியதாவது, “மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் இந்த உலகத்தில் வாழ உரிமை இருக்கிறது. அவைகளை கொல்வது தீர்வாகாது” என்று கூறினார்.