fhg

கர்நாடக மாநிலம் பெல்காவி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த அபய் பாட்டீல். இவர் நேற்று (25.07.2021) டிராக்டரில் குப்பைகளை நிரப்பி, தானே ஒட்டிவந்து பெல்காவி மாநகராட்சி கமிஷனர் ஜெகதீஷ் வீடு முன்பு கொட்டியுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக எம்எல்ஏவே விளக்கம் அளித்துள்ளார். அதில், "கடந்த மூன்று மாதங்களாக குப்பைகளை அகற்றுமாறு பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளேன். ஆனால் ஒருமுறை கூட அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் தற்போது கமிஷனர் வீட்டு முன்பு குப்பையைக் கொட்டினேன். தொடர்ந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் கலெக்டர் வீட்டு முன்பு குப்பையைக் கொட்டுவேன்" என்றார்.

Advertisment