தன்னைத்தானே தாக்கிக்கொண்டு போலீசார் மீது பழிபோட்ட பாஜக எம்.எல்.ஏ: வீடியோ மூலம் கையும் களவுமாக சிக்கினார்...(வீடியோ)

தன்னை தானே கல்லால் தாக்கி கொண்டு, காவலர்கள் தாக்கியதாக கூறி மருத்துவமனையில் அனுமதியான பாஜக எம்.எல்.ஏ வீடியோ வெளியானதால் சிக்கியுள்ளார்.

bjp mla raja singh caught by video of hitting himself by stone

தெலுங்கானாவின் கோஷமஹால் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பாஜக வை சேர்ந்த ராஜா சிங் நேற்று இரவு 1 மணிக்கு அப்பகுதியில் உள்ள சுதந்திர போராட்ட வீரரான அவந்தி பாய் சிலை உள்ள இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு உள்ள 6 அடி உயரமுள்ள அவந்தி பாயின் சிலையை எடுத்துவிட்டு புதிதாக 25 அடி உயரமுள்ள சிலையை வைக்கப்பபோவதாக கூறியுள்ளார்.

அங்கிருந்த போலீசார் அவரிடம் அதற்கான அனுமதி உள்ளதா என கேட்டுள்ளனர். அவரிடம் அனுமதி இல்லாத நிலையில் அவரை சிலை வைக்க கூடாது என தடுத்துள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த அவரது தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து தனது தலையில் பலமாக தாக்கி கொண்ட ராஜா சிங், காவலர்கள் தாக்கியதாக கூறி அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்ந்தார். ஆனால் அங்கு பதிவு செய்யப்பட்ட வீடியோவில், அவர் தன்னைத்தானே கல்லால் தாக்கி கொள்வது பதிவாகியுள்ளது.

தெலுங்கானா சட்டசப்பையில் உள்ள ஒரே ஒரு பாஜக எம்.எல்.ஏ இவர் மட்டும்தான். மேலும் இதுபோல அடிக்கடி அவர் செய்யும் பல காரியங்கள் அம்மாநிலத்தில் சர்ச்சையாகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

telangana
இதையும் படியுங்கள்
Subscribe