
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், மீதமுள்ள மூன்று கட்ட தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் உத்தரப்பிரதேசத்தின் ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் சிட்டிங் பாஜக எம்எல்ஏ பூபேஷ் சவுபே, தேர்தல் பிரச்சாரகூட்டத்தின்போது காதுகளை பிடித்துகொண்டு தோப்புக்கரணம் போட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
எம்எல்ஏ பூபேஷ் சவுபேவை பார்க்க முடியவில்லை, அணுக முடியவில்லை என தொகுதி மக்களிடம் அதிருப்தி நிலவி வந்த நிலையில், அதை உணர்ந்துகொண்ட பூபேஷ் சவுபே, பிரச்சார கூட்டதின்போது திடீரென நாற்காலியில் ஏறி நின்று காதுகளை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணமிட்டு, கடந்த ஐந்தாண்டுகளாக தான் செய்த தவறுகளை மன்னித்துவிடுமாறு மக்களை கேட்டுக்கொண்டதோடு, தான் மீண்டும் வெற்றிபெற ஆசி வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
#Watch: BJP MLA Bhupesh Chaubey holds his ears and does sit-ups to apologise to voters for mistakes
Chaubey represented Robertsganj in the outgoing Uttar Pradesh assembly. pic.twitter.com/4zh5XYcpRg— Abu Aimal (@AbuAimal) February 23, 2022
எம்எல்ஏ பூபேஷ் சவுபே, தோப்புக்கரணமிடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.