bjp

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

அண்மையில் பீகாரில் நடந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இரங்கல் மற்றும்அஸ்த்தி வழங்கும் நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் மாநில அமைச்சர்கள் மேடையில் காமெடி செய்து சிரித்து கொண்ட வீடியோ காட்சி வெளியாகி கடும்விமர்சனத்தை பெற்றுவருகிறது.

Advertisment

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்து அவரது அஸ்த்தி நாட்டில் உள்ள முக்கிய நதிகளில் கரைக்கும் வகையில் அவரது அஸ்த்தியை அனைத்து மாநில முக்கிய பாஜக தலைவர்களை அழைத்து அஸ்தியை ஒப்படைக்கும் இரங்கல்நிகழ்ச்சி பீஹார் மாநிலம் ராய்பூரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர்மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் பங்கு பெற்றனர். அந்த நிகழ்ச்சி கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அஜய் சந்த்ரகார் மற்றும் வேளாண்துறை அமைச்சர் பிரிஜ்மோஹன் அகர்வால் ஆகியோர் அது இரங்கல் கூட்டம் என்றுகூட பொருட்படுத்தாமல் மாறி மாறிஜோக் சொல்லி பலமாக சிரித்தனர். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது பெரும் விமர்சனத்தை பெற்றுவருகிறது.