ஹரியானா மாநிலத்தில் பாஜக தலைமையிலானஆட்சியில் மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வருகிறார். இவரதுஅமைச்சரவையில் விளையாட்டு துறை அமைச்சராகஇருந்து வருகிறார் சந்தீப்சிங். முன்னாள் ஒலிம்பிக்வீரரானஇவர், தன்னைபாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகஜூனியர் தடகள பயிற்சியாளர் ஒருவர்குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், அந்த பயிற்சியாளர் கூறும்போது, “அவருடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும்,அதற்காக எனக்கு பதவி உயர்வு உள்ளிட்ட பல வசதிகளைச் செய்து தருவதாகவும்அமைச்சர் சந்தீப் சிங் தெரிவித்தார். ஆனால், அதற்கு நான் மறுக்கவே என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்”என்றும் கூறியிருந்தார். இது ஹரியானா மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து அந்த ஜூனியர் தடகள பயிற்சியாளர் போலீசில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் அமைச்சர் சந்தீப் சிங் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்த சண்டிகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.