பள்ளி கட்டணம் குறித்து புகாரளித்த பெற்றோரை சாகச் சொன்ன பாஜக அமைச்சர்!

mp bjp minister

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. அக்கட்சியைச் சேர்ந்த இந்தர் சிங் பர்மர் என்பவர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார். இந்தநிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில், பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகாரளிக்க அம்மாநில பெற்றோர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்தர் சிங் பர்மரின் இல்லத்திற்குச் சென்று அவரை சந்தித்து புகாரளித்தனர்.

அப்போது பெற்றோர்கள், “பள்ளிக்கல்வித்துறை எங்களது பிரச்சனையைத் தீர்க்கவில்லையென்றால் என்ன செய்வது?” என அமைச்சரிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர், “மரோ ஜாவோ (போய் சாவுங்கள்)” என கூறியுள்ளார். அமைச்சர் பெற்றோர்களைப் போய்ச் சாவுங்கள் எனக் கூறிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

அமைச்சரின் பதிலைக் கேட்ட பெற்றோர், "என்ன சார் பண்றது.. நாங்கள் சாகிறோம்" என கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

Madhya Pradesh minister school fee
இதையும் படியுங்கள்
Subscribe