BJP  Member passes away Criminals surrender in Trichy!

புதுச்சேரி மாநிலம், மங்கலம் தொகுதி பா.ஜ.க பொறுப்பாளர் செந்தில்குமரன்(45). ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வரும் இவர், உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினர் ஆவார். இந்நிலையில் நேற்று இரவு வில்லியனூர் பகுதி கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தனது நண்பருடன் பேக்கரி கடையில் இருந்தபோது, மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதனால் டீ கடைக்கு வந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் காவல் நிலைய போலீசார் செந்தில்குமரனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

போலீசாரின்முதற்கட்ட விசாரணையில்செந்தில்குமரனை முன்விரோதம் காரணமாக வில்லியனூரை சேர்ந்த பிரபல ரவுடி நித்தியானந்தா தனது கூட்டாளிகள் 7 பேர் கொண்ட கும்பலைக் கொண்டு தீர்த்துக் கட்டியது தெரிய வந்தது.

Advertisment

BJP  Member passes away Criminals surrender in Trichy!

இந்நிலையில் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் நடந்த சம்பவம்காட்சியாகபதிவாகி இருந்தது. தற்போது அந்த சி.சி.டி.வி காட்சி வெளியாகி உள்ளது . அதில் முதலில் வரும் நபர் நாட்டு வெடிகுண்டை செந்தில்குமார் மீது வீசுவதும் அதிலிருந்து தப்பிக்கும் அவரை தொடர்ந்து பின்னால் வரும் மூன்று பேர் குமபல் அவரை அறிவாளால் வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் 6 பேர் தப்பியோடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இதனிடையே செந்தில்குமரன் கொலையில் தொடர்புடைய 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.