மும்பையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத் பவார் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. அப்படி நடக்காதபட்சத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளது. ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் 2 வது முறையாக பிரதமர் பதவிக்கு வர வாய்ப்பில்லை” என அவர் கூறினார். மேலும் மோடிக்கு பதிலாக யார் பிரதமர் ஆவார்கள் என்பது பற்றி அவர் கருது ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பாஜக ஆட்சி, ஆனால் மோடி பிரதமர் இல்லை...தேசியவாத காங்கிரஸ் தலைவர் பேட்டி...
Advertisment