Advertisment

இடைத்தேர்தலில் பாஜக தோல்வி... காங் டெபாசிட் இழப்பு...  

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா என இரண்டு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Advertisment

nm

மேலும் பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்று வருகிறது.

ஒடிசா மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் நவீன் பட்நாயக் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து ஹிஞ்சலி தொகுதியை தக்க வைத்துக் கொண்ட அவர் பெஜ்பூர் தொகுதியை ராஜினாமா செய்தார்.

Advertisment

இந்த தொகுதியில் கடந்த 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று ஆளுகின்ற பிஜு தனதா தள கட்சியை சேர்ந்த பெண் வேட்பாளர் ரீட்டா சாஹு 1,37,957 வாக்குகள் பெற்றார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கரிதா 37,967 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இயைதடுத்து சாஹூ 97,990 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டவேட்பாளர் டெபாசிட்டை இழந்தார்.

Narendra Modi naveen patnaik
இதையும் படியுங்கள்
Subscribe