கொல்கத்தாவில் பா.ஜ.க. மூத்த தலைவர் ஷியாம பிரசாத் முகர்ஜீயின் சிலையை சேதப்படுத்திய ஏழு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திரிபுராவில் அடுத்தடுத்த நாட்களில் ரஷ்ய புரட்சியாளர் விளாதிமிர் லெனின் சிலை உடைக்கப்பட்ட நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் வைக்கப்பட்ட பா.ஜ.க. மூத்த தலைவர் ஷியாம பிரசாத் முகர்ஜீயின் மார்பளவு சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் இருந்த அந்த சிலையின் முகத்தில் கறுப்பு மை பூசி, கண் மற்றும் காதுகளை சேதப்படுத்தியுள்ளனர்.

Advertisment

பாரதிய ஜன் சங்க் என்ற அமைப்பை நிறுவியஷியாம பிரசாத் முகர்ஜீ,பா.ஜ.க. முன்னோடியாக இருந்தவர். இந்த சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பா.ஜ.க. தரப்பில் இருந்து, ‘இது காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கை மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும். மேலும், இந்த நாளை சட்ட மீறல் நாளாக கடைப்பிடிப்போம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.