Advertisment

அரசு அதிகாரியைச் செருப்பால் அடித்த பா.ஜ.க. முக்கியத் தலைவர்... சர்ச்சையான வீடியோ...

bjp leader sonali phogat slaps official in public

Advertisment

ஹரியானா பா.ஜ.க. முக்கியத் தலைவரும், டிக்டாக் நட்சத்திரமுமான சோனாலி போகாட், ஹிசார் சந்தைக் குழு செயலாளரைப் பொதுவெளியில் வைத்துச் செருப்பால் அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக் மூலம் பிரபலமான சோனாலி, ஹரியானா பா.ஜ.க.வில் முக்கியத் தலைவராக தற்போது வலம் வருகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகவும் இவர் போட்டியிட்டார். தனது செயல்பாடுகளால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் சோனாலி, ஹிசார் பகுதியில் உள்ள பாலசமந்த் மண்டி என்ற சந்தைப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அரசின் சந்தைக் குழு செயலாளரான சுல்தான் சிங் அங்கு இருந்துள்ளார். இருவரும் பேசிக்கொண்ட போது வாக்குவாதம் ஏற்பட்டு, சோனாலி தனது செருப்பைக் கழட்டி சுல்தான் சிங்கை கடுமையாகத் தாக்கினார்.

சுல்தான் சிங், பா.ஜ.க.வின் இரு முக்கியமான பெண் தலைவர்கள் குறித்து மோசமாக விமர்சனம் செய்ததாலேயே அவரை அடித்ததாக சோனாலி தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு மன்னிப்புக் கடிதம் ஒன்றையும் சுல்தான் சிங்கிடம் இருந்து சோனாலி பெற்றுள்ளார். மேலும், சுல்தான் சிங் மீது காவல்நிலையத்தில் அவர் புகாரும் அளித்துள்ளார். ஆனால், தேர்தல் நேரத்தில் உதவி செய்யாததற்காகவே தன்னை சோனாலி அடித்ததாகக் கூறும் சுல்தான் சிங், தன்னை மிரட்டி சோனாலி மன்னிப்புக் கடிதம் வாங்கியதாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

haryana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe