Advertisment

ராகுலின் ரேப் இன் இந்தியா பேச்சு - தேர்தல் ஆணையத்திடம் ஸ்மிருதி இரானி புகார்!

ஜார்கண்டில் நடந்த ஒரு தேர்தல் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசும் போது, நரேந்திர மோடி 'மேக் இன் இந்தியா' என்று கூறியிருந்தார், ஆனால் இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் ரேப் இன் இந்தியாவாக உள்ளது. தேசம் தனது மகள்களை "பாஜகவின் சில சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து" காப்பாற்ற வேண்டும். தற்போது நாடு "ரேப் இன் இந்தியா"வாக மாறி வருகிறது என பாஜக அரசை கடுமையாக சாடினார்.

Advertisment

ரேப் இன் இந்தியா என்கிற வார்த்தையை பயன்படுத்தி பேசிய ராகுல்காந்திக்கு பெண் எம்.பி.,க்கள் இன்று மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர். இந்நிலையில் ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு அளித்தார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்மிருதி இரானி கூறுகையில், மேக் இன் இந்தியா திட்டத்தை ரேப் இன் இந்தியா என்ற ராகுல் காந்தியின் பேச்சு குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது" என அவர் கூறினார்.

Advertisment
Rahul gandhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe