Advertisment

ஹைதராபாத்தில் உற்சாகமாக நடனம் ஆடிய குஷ்பூ!

bjp leader Khushboo danced enthusiastically in Hyderabad!

பா.ஜ.க.வின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் இன்று (02/07/2022) தொடங்கியுள்ளது.

Advertisment

ஹைதராபாத் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 19 மாநில முதலமைச்சர்கள், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மிகப்பெரிய அளவில் நடைபெற்று வரும், இக்கூட்டத்தையொட்டி, ஹைதராபாத் முழுவதும் பா.ஜ.க. கொடிகள் மற்றும் பதாகைகள் கட்டப்பட்டுள்ளன. மத்திய அரசின் சாதனைகளைப் பறைசாற்றும் வகையில், சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

Advertisment

செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த குஷ்பூ, தொண்டர்களுடன் உற்சாகமாக நடனமாடினார். முதல் நாளான இன்று (02/07/2022) பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர்கள் மற்றும் தேசிய நிர்வாகிகள் ஆலோசிக்கின்றனர். நாளைய தினம் மாநாட்டு மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்துவதே இரண்டு நாள் தேசிய செயற்குழுவின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

leaders telangana
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe