ADVERTISEMENT

"நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்" -உச்ச நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் மனு...

12:02 PM Nov 30, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேர்தலில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாயா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் நடைபெறும்போது தங்களது தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாத வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கும் முறை 2014 முதல் இந்தியாவில் நடைமுறை இந்தியாவிலிருந்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் நோட்டாவுக்கு வாக்களித்திருந்தனர். இந்நிலையில், தேர்தலில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாயா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவரது அந்த மனுவில், "ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறும்போது, வேட்பாளரைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழும்பட்சத்தில் அந்தத் தேர்தலை ரத்து செய்து, அடுத்த 6 மாதத்துக்குள் அந்த தொகுதியில் புதிதாகத் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். மேலும் அந்தத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டால், நேர்மையான, தேசப்பற்றுள்ள நபர்களைத் தேர்தலில் நிறுத்தும் நிலை அரசியல் கட்சிகளுக்கு உருவாகும். அதேபோல, போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை, மக்களின் உண்மையான ஜனநாயகத்தைக் குறிப்பதாக அமையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT