
பத்தாம் வகுப்பு கேள்வித்தாள் கசிந்த விவகாரம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பந்தி சஞ்சய் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் பந்தி சஞ்சய் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது ஆதரவாளர்களும், பாஜகவினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பந்தி சஞ்சய் குமார், பாலகுர்தி பகுதி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டார். அப்பொழுது அங்கு வந்த பாஜக தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவரை வழிமறித்து காப்பாற்ற முயன்றனர். இதன் காரணமாக அங்கிருந்த போலீசார் பாஜகவினர் மீது தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்து பந்தி சஞ்சய் குமாரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.