Advertisment

உடனடியாக கிளம்பி வாருங்கள்... 20,000 தொண்டர்களை திரட்டும் பாஜக...

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலைப்படி பாஜக கூட்டணி 340 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 90 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

Advertisment

bjp invites 20000 workers to delhi

பாஜக மட்டுமே தனிப்பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எனவே இதனை நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் கொண்டாடும் விதமாக பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் 20,000 தொண்டர்களை பாஜக தலைமை டெல்லிக்கு அழைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் மூலம் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Delhi loksabha election2019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe