Advertisment

அரசு பங்களாவை காலி செய்ய மறுக்கும் பா.ஜ.கவினர்; பீகார் அரசு எடுத்த அதிரடி முடிவு

BJP government refuses to vacate government bungalow; Action taken by Bihar Govt

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்துநிதிஷ் குமார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்வெளியேறி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்துடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார். இதனால், பா.ஜ.க கட்சியிலிருந்த அமைச்சர்கள் பலர் தங்களது அமைச்சர் பதவியை இழந்தனர். இந்த நிலையில் பீகார் அரசு இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்து எம்.எல்.ஏக்களுக்கான குடியிருப்பு வசதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Advertisment

ஆனால்,பா.ஜ.க முன்னாள் அமைச்சர்கள் அமைச்சர்களுக்கான அரசு பங்களாவில் இருந்து வெளியேறாமல் பல மாதங்களாகத்தங்கி இருந்தனர். இதனையடுத்து, பீகார் அரசு இவர்களை அரசு பங்களாவில் இருந்து காலி செய்யும்படி பலமுறை அறிவுறுத்தியது. அதனைத்தொடர்ந்து அவர்களுக்கு அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் எந்த பதிலும் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்த நிலையில், அரசு பங்களாவில் பல காலம் தங்கியிருந்த காரணத்திற்காக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த பா.ஜ.க எம்.எல்.ஏக்களுக்குபீகார் அரசு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அதன் அடிப்படையில், முன்னாள் துணை முதல்வர் ரேணு தேவிக்கு ரூ.1.26 லட்சம், முன்னாள் அமைச்சர்கள் அலோக் ரஞ்சனுக்கு ரூ.1.67 லட்சம், ராம் சூரத்குமாருக்கு ரூ.90,928, ஜிபேஸ் குமாருக்கு ரூ.1.26 லட்சம் மற்றும் ஜானக் ராமுக்கு ரூ.65,922 என பீகார் மாநில அரசு அபராதமாக விதித்துள்ளது.

Bihar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe