Advertisment

சுவரில் மலர்ந்த தாமரை! 

பாஜக தொடங்கப்பட்ட தினத்தைக்கொண்டாடும் வகையில் இன்று நாடு முழுவதும் பாஜகவினர் 44வது நிறுவன தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். மேலும் கட்சியின் சின்னமானதாமரையைசுவர்களில் வரையும் பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளனர்.

Advertisment

அந்த வகையில்டெல்லியில் அக்கட்சியின் தேசியத்தலைவர் ஜெ.பி.நட்டா, சுவரில் தாமரையை வரைந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாஜகவின் நிறுவன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடும்வகையில் சுவரில் தாமரை வரையும்நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இதனை அனைத்து மாநிலத்தலைவர்களும்மேற்கொள்வார்கள்" என்று தெரிவித்தார்.

Advertisment

இதன் ஒரு பகுதியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகே உள்ள சுவரில் கட்சியின் தாமரை சின்னத்தை வரைந்தார். அதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இனி வரும் காலங்களில் தமிழகத்திலும்பாஜக ஆட்சியை பிடிக்கும். பிரதமரின் மற்றும் நமது தேசியத் தலைவரின் தொலைநோக்கு பார்வைகள் அடிமட்ட மக்கள் வரை சென்றடைவதை விரும்புகிறோம். தமிழகத்தில் பாஜக தன்னை வலுப்படுத்திக் கொண்டு 2026ல் ஆட்சிக்கு வர வேண்டும் இதுவே எங்களின் நோக்கம்" என்றார்.

lotus Annamalai Chennai jp nadda Delhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe