BJP forms the government in Arunachal Pradesh

நாடாளுமன்ற தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்ப்பட்டு வருகிறது.

Advertisment

60 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட அருணாச்சலப்பிரதேசத்தில் பாஜக ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. தற்போது தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களத்தில் உள்ளன. 60 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

Advertisment

ஏற்கனவே முதல்வர் பெமா காண்டு உட்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 50 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்கனவே வெற்றிபெற்ற 10 தொகுதிகளையும் சேர்த்து 42 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 1 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 7 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு 31 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் கிட்டத்தட்ட பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.