Skip to main content

சி.எஸ்.கே. கொடிக்குத் தடை, பா.ஜ.க. கொடி பறந்தது (வீடியோ)

Published on 26/04/2018 | Edited on 26/04/2018
chinnasamy stadium bjp

 

பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த போட்டியில் சென்னை அணியும் பெங்களூர் அணியும் மோதிக்கொண்டன. இதில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தை காணவந்த சென்னை ரசிகர்கள் சென்னை அணியின் கொடியை எடுத்துவந்துள்ளனர். சில வாயில்களில் இந்த கொடிகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். அப்பொழுது சிலர் பா.ஜ.க. கொடியை அசைத்து ஆரவாரம் செய்துள்ளனர். இதைப் பார்த்தவர்கள் இன்னொரு அணியின் கொடியை அனுமதிக்கவில்லை. ஆனால் கட்சிக் கொடியை அனுமதித்துள்ளார்களே. இது என்ன நியாயம் என மனக்குமுறல்களுடன் ஆட்டத்தை கண்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்