ஆன்லைனில் பாஜக சார்பில் பல்வேறு விளம்பர பக்கங்களை உருவாக்கி, மோடிக்கு வாக்களிக்க உறுதி அளித்தால் பரிசுப் பொருட்களை அறிவிக்கும் போக்கு அம்பலமாகி இருக்கிறது. இந்த விளம்பரப் பக்கத்திற்காக ஒரே மாதத்தில் பாஜக ரூ. 46.62 இலட்சம் செலவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடியின் ட்விட்டர் பக்கத்திலேயே இதுபோன்ற இலவச பரிசுகள் குறித்து குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த முகநூல் பக்கங்களுக்கும், ட்விட்டர் பக்கங்களுக்கும் பணத்தை வாரி இறைப்பது பாஜகவா? வேறு யாருமா?
இந்த மாதிரி இலவச பொருட்களை கொடுத்து வாக்காளர்களை கவரும் நடவடிக்கை தேர்தல் கமிஷனுக்கு தெரியுமா தெரியாதா?
இத்தகைய முதலீடுகள் கோடிக்கணக்கில் இருக்கம்போது, இவையெல்லாம் பாஜகவின் தேர்தல் கணக்கில் வருமா வராதா?
என்று எதிர்க்கட்சிகள் வினாக்களை எழுப்பியுள்ளன.