Advertisment

‘திண்டாட்டத்தில் லட்சோபலட்சம் இளைஞர்களின் கனவு’ - புள்ளிப்பட்டியலை அடுக்கும் ராகுல்காந்தி

BJP is crushing the faith of the youth

பொதுத்துறை நிறுவனங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களை நீக்கி மத்திய அரசு இளைஞர்களின் நம்பிக்கையை நசுக்கிவிட்டதாகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமையாக இருந்ததோடு, ஒவ்வொரு இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கான கனவாகவும் இருந்தது. ஆனால் இன்று அரசாங்கம் அதற்கு முன்னுரிமை அளிப்பதில்லை.

Advertisment

2014ல் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் 16.9 லட்சமாக இருந்த வேலைவாய்ப்பு 2022ல் 14.6 லட்சமாக குறைந்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 1,81,127 பேர் வேலை இழந்துள்ளனர். அதேபோல் SAIL இல் 61,928 பேரும், MTNL இல் 34,997 பேரும்,SECL இல் 29,140 பேரும் FCI இல் 28,063 பேரும், ONGCயில் 21,120 பேரும் வேலை இழந்துள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்குவோம் என்று பொய் வாக்குறுதி அளித்தவர்கள், வேலைகளை அதிகரிப்பதற்குப் பதிலாக, 2 லட்சத்துக்கும் அதிகமானோரை வேலையில் இருந்து நீக்கியுள்ளனர்.

இதுமட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணியாளர்களை இருமடங்கு அதிகரித்துள்ளனர். ஒப்பந்த ஊழியர்களை அதிகரிப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் இட ஒதுக்கீடு என்ற உரிமையைப் பறிக்கும் வழியல்லவா? அப்படி இல்லை என்றால் இந்த நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கான சதியா? ஒருபுறம் தொழிலதிபர்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்வது மறுபுறம் பொதுத்துறை நிறுவங்களில் இருந்து வேலைக்கான இருப்பிடங்களை நீக்குவது. இது என்ன மாதிரியான நிலைப்பாடு.

இது உண்மையிலேயே ‘அமிர்த காலம்’ என்றால் ஏன் இப்படி வேலைகள் மறைந்து வருகின்றன? ஒரு சில முதலாளித்துவ நண்பர்களின் நலனுக்காக லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நசுக்கப்படுவதால், இந்த அரசாங்கத்தின் கீழ் நாடு வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கிறது.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் சரியான சூழலையும் அரசாங்கத்திடமிருந்து ஆதரவையும் பெற்றால் தான், அவை பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் சொத்து, அவை இந்தியாவின் முன்னேற்றப் பாதையை வலுப்படுத்தும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும்” எனத்தெரிவித்துள்ளார்.

congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe