Advertisment

பாஜக ஆளும் 3 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை!

r

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் , சத்தீஸ்கர் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

Advertisment

90 இடங்களை கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்59 இடங்களிலும், பாஜக 24 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

Advertisment

230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 116 இடங்களிலும் பாஜக 99 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எம்.என்.எப். -27, காங்கிரஸ் 9 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி 85 இடங்களிலும் காங்கிரஸ் 22 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களிலும் பாஜக 81 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் 199 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

congress Rahul gandhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe