
மத்திய பிரேதசத்தில் 15 வருடங்களாக பாஜகதான் ஆட்சி அமைத்து வருகிறது. தற்போது ம்.பியின் முதலமைச்சராக இருப்பவர் சிவராஜ் சிங் சவுகான். மேலும் அடுத்த வருடம் இந்த மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், பாஜக பரவலான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதற்கு முதல் கட்டமாக இந்த ரக்ஷா பந்தன் பண்டிகையை பயன்படுத்தியுள்ளார் சிவராஜ் சிங் சவுகான்.
இந்த மாநிலத்தில் இருக்கும் சுமார் 1.1 கோடி பெண்களுக்கு சிவராஜ் கடிதம் மூலம் பாஜகவுக்கு உங்களின் ஆதரவு வேண்டும் என்று எழுத்து பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். அதிலேயே ரக்ஷா பந்தன் பண்டிகை வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். இதற்காக சுமார் நான்கு கோடி வரை செலவாகியுள்ளதாகவும்,அச்செலவை ம.பி பாஜக ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
தற்போது கடிதம் எல்லாம் இமெயில் செய்துவிடுவதால், இந்த வாழ்த்து கடிதங்களை சரிவர சேர்க்க தபால் துறையில் இருக்கும் குறைந்தளவிலான தபால்காரர்களால் முடியாமல் சிரமத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், தபால்துறையோ இதை கட்டாயமாக நேரில் சென்று ம.பி. பெண்களிடம் சேர்க்க வேண்டும் என்று திட்டவட்டமாக உத்தரவளித்துள்ளது. இதற்காக, தலா ஆயிரம் கடிதங்களை போடும் அளவுக்கு 4,000 சிறப்பு பைகளையும் தயாரித்துள்ளனர்.