Advertisment

மேலும் ஒரு மாநிலத்தில் முதல்வரை மாற்றும் பாஜக?

tripura cm

Advertisment

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், அம்மாநிலத்தின் முதல்வரை அரசியல் நெருக்கடியைக் காரணம் காட்டி பாஜக தலைமை சமீபத்தில் மாற்றியது. அதேபோல் கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா சில தினங்களுக்கு முன்பு மாற்றப்பட்டு, பசவராஜ் பொம்மை, கர்நாடகாவின்புதிய முதல்வராக நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில், தற்போது திரிபுராவிலும்முதல்வரை மாற்ற பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது முதல்வராகஇருந்துவரும்பிப்லாப் குமார் தேபிற்கு திரிபுரா மாநில பாஜகவிற்குள்ளயேநீண்டகாலமாக எதிர்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில், அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதாலும், திரிபுரா தேர்தலில் மம்தாவின் திரிணமூல்காங்கிரஸ் தாக்கத்தை ஏற்படுத்திவிடாமல் தடுக்கும் வகையிலும்திரிபுராவிற்குபுதிய முதல்வரை நியமிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திரிபுராவின் துணை முதல்வர் ஜிஷ்ணு தேப் பர்மன், மாநில பாஜக தலைவர் மாணிக் சாஹா, மூத்த பாஜக தலைவர் சுதீப் ராய் பர்மன் ஆகிய மூவரில்ஒருவர், திரிபுராவின் அடுத்த முதல்வராக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. இதில் சுதீப் ராய் பர்மன், தற்போதைய முதல்வர் பிப்லாப் குமார் தேபிற்குஎதிராக போர்க்கொடி தூக்கியுள்ளவர்களில் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

tmc tripura
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe