bjp candidates in puducherry former cm narayanasamy pressmeet

புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.

Advertisment

அப்போது அவர் கூறியதாவது,"வாக்காளர் விவரங்களைப் பெற்று அவர்களின் செல்ஃபோன் எண்களைத் தொடர்புகொண்டு பரப்புரை செய்தபா.ஜ.க வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரிக்குபுகார் மனு அளிப்போம். தேவைப்பட்டால் சட்டரீதியாக இப்பிரச்சினையை எதிர்கொள்வோம். தேர்தலின்போது கலவரத்தைத் தூண்ட பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளி வருகிறது. இதைக் காவல்துறை கண்காணிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை நாளை முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி வெளியிட உள்ளார்"இவ்வாறு அவர் கூறினார்.

Advertisment