Advertisment

“சாலைகளைப் பிரியங்கா காந்தியின் கன்னம் போல் மாற்றுவேன்” - பா.ஜ.க தலைவரின் சர்ச்சை பேச்சு

BJP candidate's controversial speech about Priyanka Gandhi's cheek

Advertisment

இந்த தேர்தலில், இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆத்மி கட்சி, காங்கிரஸுடன் இருந்து விலகி தனித்து போட்டியிட இருக்கிறது. அதனால், அங்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், பா.ஜ.க தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அதிஷி தொகுதியான கல்காஜி சட்டமன்றத் தொகுதியில், முன்னாள் எம்.பி ரமேஷ் பிதுரியை பா.ஜ.க வேட்பாளராக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள பா.ஜ.க வேட்பாளர் ரமேஷ் பிதுரி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ரமேஷ் பிதுரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “மாநிலத்தின் சாலைகளை ஹேமமாலினியின் கன்னங்கள் போல் மென்மையாக்குவேன் என்று பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்தார். லாலு பொய் சொன்னார், அவர் அதை செய்யவில்லை. ஆனால் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ஓக்லா மற்றும் சங்கம் விஹார் சாலைகளை நாங்கள் அமைத்தது போல், கல்காஜியின் அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் கன்னத்தைப் போல மென்மையாக்குவோம்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

பா.ஜ.க தலைவர் ரமேஷ் பிதுரியின் இந்த பேச்சுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீனேட் தெரிவித்ததாவது, “பா.ஜ.க பெண்களுக்கு எதிரானது. பிரியங்கா காந்தி குறித்து ரமேஷ் பிதுரி கூறியிருப்பது வெட்கக்கேடானது மட்டுமின்றி, பெண்கள் மீதான அவரது கேவலமான மனநிலையையும் காட்டுகிறது. சபையில் தனது சக எம்.பி.க்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திய ஒரு நபரிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும், எந்த தண்டனையும் பெறவில்லை? இதுதான் பாஜகவின் உண்மையான முகம்” என்று கூறினார்.

Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe