bjp announces new presidents for three states including delhi

டெல்லி உட்பட 3 மாநிலங்களுக்கான புதிய பாஜக தலைவர்களின் பெயர்களை அறிவித்துள்ளார் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா.

Advertisment

Advertisment

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவின் அறிவிப்பின்படி, டெல்லி மாநில பாஜக தலைவராக இருந்த மனோஜ் திவாரி மாற்றப்பட்டு, அதற்குபதிலாக ஆதேஷ் குமார் குப்தா டெல்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, சத்தீஸ்கர் மாநில தலைவராக விஷ்ணு தியோ சாய் மற்றும் மணிப்பூர் மாநில தலைவராக திகேந்திர சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் டெல்லி பாஜக தலைவராக இருந்த மனோஜ் திவாரி அம்மாநிலசட்டசபைதேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகுவதாக அண்மையில் அறிவித்த நிலையில், அதனை அப்போது பாஜக தலைமை ஏற்க மறுத்தது. இந்நிலையில், தற்போது அவர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அதற்குபதில் வடக்கு டெல்லி மாநகராட்சி முன்னாள் மேயரான ஆதேஷ் குமார் குப்தா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.