Advertisment

நெருங்கும் தேர்தல்; மத்திய அமைச்சர்களை மாநில பொறுப்பாளர்களாக்கிய பாஜக!

farooq abdulla

Advertisment

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இம்மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள், தற்போதேதேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளைமேற்கொள்ளத்தொடங்கிவிட்டன.

இந்தநிலையில்பாஜக, தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர்தர்மேந்திரபிரதானைஉத்தரப்பிரதேசமாநில தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சி நியமித்துள்ளது.

பாராளுமன்ற விவகார அமைச்சர்பிரல்ஹாத்ஜோஷியைஉத்தரகண்ட் மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நீர்வளத்துறை அமைச்சர்கஜேந்திரசிங்ஷெகாவத்பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திரபட்னாவிஸ்கோவாவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர்பூபிந்தர்யாதவ்மணிப்பூர் மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இவர்களைத்தவிர சில மத்திய அமைச்சர்களும், மத்திய இணை அமைச்சர்களும்,எம்.பிக்களும்இந்த ஐந்து மாநிலங்களிலும்துணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

afghanistan farooq abdullah taliban
இதையும் படியுங்கள்
Subscribe