Skip to main content

"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டும் ஆட்கள் நாங்கள் அல்ல" - அண்ணாமலை பேச்சு

Published on 31/05/2022 | Edited on 31/05/2022

 

ே்ிப

 

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மே 21ஆம் தேதி குறைத்தது. அதன்படி, பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டுமென பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்தார். பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசு குறைக்காவிட்டால் தமிழக பாஜக சார்பில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

 

இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கோட்டையை நோக்கிய முற்றுகை பேரணி இன்று மாலை நடைபெற்றது. ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கோட்டையை நோக்கிப் புறப்பட்ட பாஜக தொண்டர்கள், பாரத் மாதாகி ஜெய், வந்தே மாதரம் எனக் கோஷம் எழுப்பியபடி வந்தனர். அவர்களைப் பாதியில் கைது செய்த காவல்துறையினர், வேறு யாரும் கோட்டையை நோக்கிச் செல்ல முடியாத படி அரண் அமைத்து நின்றனர். பேரணிக்கு முன்பு பேசிய அண்ணாமலை தமிழக அரசைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

 

இதுதொடர்பாக பேசிய அவர், "  இன்னும் 750 நாட்கள் மட்டுமே நாம் இந்த அரசுக்காக நாம் காத்திருக்க வேண்டும். அதன் பிறகு அவர்களாகவே போக வேண்டிய இடத்திற்குப் போய் விடுவார்கள். சென்னை தலைநகரம் என்ற நிலையிலிருந்து கஞ்சா நகரமாக மாறி வருகிறது. அதைத் தடுக்க இந்த அரசுக்குத் துப்பில்லை. கச்சத் தீவை இந்த திமுக அரசால் கனவில் கூட மீட்க முடியாது. ஆனால் பிரதமர் மோடிக்கு அதை எப்படி எப்போது மீட்க வேண்டும் என்று தெரியும். 

 

தமிழகத்தில் பாஜகவின் எழுச்சி தொடங்கிவிட்டது. எங்களுக்கும் மீடியாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. மீடியா என்ற போர்வையில் இருக்கும் திமுகவினருக்கும் எங்களுக்கும் இடையேதான் பிரச்சனை. மீடியாவுக்கான மரியாதை மூன்று மடங்காக நாங்கள் தருவோம். ஆனால் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்ட  வேண்டும் என்றால் அது எங்களால் முடியாது. இன்னும் 20 நாட்களில் தமிழக அரசு பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்