Advertisment

ஆவேசமாக மோதிக் கொண்ட பா.ஜ.க. - காங்கிரஸ் தொண்டர்கள்!

BJP AND CONGRESS PARTIES LEADERS INCIDENT POLICE

பா.ஜ.க. தொண்டர்களும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் ஆவேசமாக மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Advertisment

மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் மாவட்டத்தில் உள்ள கத்திப்புரா என்ற பகுதியில் கவுன்சிலர் பதவிக்கானத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக, பா.ஜ.க. வேட்பாளர் அமைத்திருந்த தேர்தல் அலுவலகத்திற்குள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் நுழைந்து, தாக்குதல் நடத்தினர். நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகின. மோதல் குறித்து வழக்குப்பதிவு செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், இரு கட்சித் தொண்டர்களும் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

congress leaders
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe