/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1_63.jpg)
மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
மாநிலங்களவைத் துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அந்தப் பதவிக்கு இன்று காலை 11 மணிக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஹரிவன்ஷும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.கே. ஹரிபிரசாதும் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலில் அதிமுகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us