பாஜகவின் 40 ஆவது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "கரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா அதனைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.கரோனா தடுப்பில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையை உலக சுகாதார நிறுவனமே பாராட்டுகிறது.130 கோடி இந்திய மக்களின் ஒற்றுமையை நேற்று இரவு 09.00 மணிக்கு நாம் பார்த்திருப்போம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/narendra modi999.jpg)
கரோனாவுக்கு எதிரான ஒருநீண்ட போராக இருக்கும்;ஆனால் அதற்காக நாம் சோர்ந்துவிடக் கூடாது.கரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் வெல்வதே நமது இலக்காக இருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை மக்கள் இவ்வளவு மதிப்பார்கள் என யாருமே கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.வீட்டிற்கு வெளியே போனால் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்; வீட்டில் இருந்தால் கூட மாஸ்க் அணியுங்கள்." இவ்வாறு பிரதமர் பேசினார்.
Follow Us