Advertisment

3 மாநிலங்களில் பாஜக- தெலுங்கானாவில் 'கை' பதித்த காங்கிரஸ்

BJP in 3 states - Congress in Telangana

Advertisment

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பலகட்டங்களாகதேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11.30மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 66 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 41 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 162 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 65 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 107 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 75 இடங்களிலும், மற்றவை 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 53 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் 35 இடங்களிலும் மற்றவை 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. நாளை மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Advertisment

தற்போதைய நிலவரப்படி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மை தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதால் அந்த மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தெலுங்கானாவில் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதால் முதன்முதலாக தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கிறது.

elections rajastan chattishghar MadhyaPradesh telungana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe