Advertisment

வாழ்விடத்தை இழந்து துடிதுடித்து இறந்த பறவைகள்... வைரலாகும் வீடியோ காட்சி!

Birds that lost their habitat and died...Viral video!

பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து வந்த மரத்தினை ஜேசிபி இயந்திரம் கொண்டு சாய்த்தபொழுது அதிலிருந்த பறவைகள் மரத்தோடு கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

கேரள மாநிலம் மலப்புரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள மரம் ஒன்றில் பறவைகள் அதிகமாக வசித்து வந்த நிலையில் ஜேசிபி இயந்திரம் கொண்டு மரத்தை அகற்றும்பணி நடைபெற்றது. அப்பொழுது சடார் என்று மரம் கீழே விழ மரத்தில் தங்கி இருந்த பறவைகள் 'பட பட' வென பறந்து சென்றன. இருப்பினும் பல பறவைகள் பறக்கமுடியாமல் மரத்துடன் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தன.சாலையிலேயே பறவைகள் இறந்து கிடக்கும் புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

bird environment Kerala video
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe