Skip to main content

தலைநகரில் வெகுவாக குறைந்த பறவைக் காய்ச்சல் பாதிப்பு!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

ந

 

கேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள பறவைகளுக்குப் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எச்5 என்1 எனப்படும் இந்த வைரஸ், கோழி மற்றும் வாத்துகளிலும் அதிகளவில் காணப்படுகின்றன. பொதுவாக பறவைகளின் இடப்பெயர்ச்சி காலத்தில் இந்நோய் பறவைகளை அதிகம் தாக்கும். அந்த வகையில் இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியது. 

 

நாடு முழுவதும் இந்தப் பறவை காய்ச்சலால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில், அம்மாநில கால்நடைத் துறையினரின் துரித நடவடிக்கையால் குட்டநாடு, ஆலப்புழா, கோட்டயம், கைப்புழம் உட்படப் பல பகுதிகளில் 40,000க்கும் அதிகமான வாத்துகள் மற்றும் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், டெல்லியில் பறவைக் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக கருதப்பட்டதால், உயிருள்ள கோழிகளை டெல்லிக்கு எடுத்து வர அம்மாநில முதல்வர் தடை விதித்திருந்தார்.

 

இதற்கிடையே டெல்லியில் உயிரிழந்த 8 பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அங்கு பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது சில வாரங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அதன் தாக்கம் தற்போது பெருமளவு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேரளாவில் பறவைக் காய்ச்சல்...தமிழக எல்லையில் தடுப்பு முகாம்!

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

கடந்த ஒரு வருடமாகக் கேரளாவில் அடங்கி ஒழிந்திருந்த ஸ்வைன்ஃபுளூ எனப்படும் பறவைக் காய்ச்சல் தற்போது மீண்டும் தலை தூக்கியிருக்கிறது. ஒருபுறம் அச்சுறுத்தும் கரோனா மறுபக்கம் பறவைக்காய்ச்சல் மத்தள இடி நிலையிலிருக்கிறது கேரளா.
 

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் கோழிப்பண்ணை கிராமமான கொடியாத்தூர், வென்கேரி இரண்டு கிராமங்களிலுள்ள பெரிய கோழிப்பண்ணைகளின் கோழிகள் கொத்துக் கொத்தாய் செத்து விழுந்திருக்கின்றன. தகவல் போய் அவைகளைச் சோதனை செய்த கேரள கால்நடை மருத்துவர்கள் அவைகள் பறவைக் காய்ச்சல் வைரஸ்களால் தாக்கப்பட்டு மடிந்ததைக் கண்டறிந்தனர். இது தொடர்பாக அலர்ட் ஆன கேரள அரசின் சுகாதாரத்துறை அமைச்சரான சைலஜா. அந்த இரண்டு கிராமங்களின் கோழிப்பண்ணை கோழிகளை அழிக்க உத்தரவிட, அவைகள் அழிக்கப்பட்டு மேலும் வைரஸ்கள் பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

kerala  Bird flu issues tamilnadu kerala border

இதன் தாக்கமாக அண்டை மாநிலமான தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் கேரள- தமிழக எல்லையான செங்கோட்டையின் புளியரை பகுதியின் சுங்கச்சாவடியில் தீவிரத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கே சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு முகாமே ஏற்படுத்தியுள்ளனர். கேரளாவிலிருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. மேலும் தமிழகத்திற்கு பறவையினங்கள் கோழி, வாத்து, கோழி முட்டை, கோழிக்களுக்கான தீவனங்களை ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. மேலும் காய்கறி உணவுப் பொருள்கள் மற்றும் இலகு ரக வாகனம் முதல் கனரக வாகனம் வரை சோதனையிடப்பட்டு கிருமி நாசினியான குளோரின்-டை-ஆக்ஸைடு தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

kerala  Bird flu issues tamilnadu kerala border

கேரளாவிலிருந்து வாத்து, முட்டை, கோழிகளை ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. அதே போன்று கோழிகளை கேரளாவுக்கு ஏற்றிச் செல்லும் தமிழக வாகனங்கள் திரும்பி வரும் போது கோழிகளுடன் அசுத்தம் தென்பட்டால் அந்த வாகனங்களையும் திருப்பி அனுப்பிவிடுகிறோம் என்கிறார் கால்நடை பராமரிப்புத்துறையின் உதவி இயக்குனரான அசன் இப்ராஹிம்.

kerala  Bird flu issues tamilnadu kerala border

கேரளாவில் ஏற்பட்டுள்ள பறவைக்காய்ச்சல் தாக்கம் காரணமாக நெல்லை தென்காசி மாவட்டங்களில் கிலோ 160- க்கு விற்கப்பட்ட கறிக்கோழியின் விலை 100 ஆகவும் ரூ 5 லிருந்து 3.20 பைசாவாக முட்டையின் விலையும் கடுமையாகச் சரிந்துள்ளன. தற்போதைய சமூகச் சூழல் காரணமாகவும் மக்களின் பல்வேறு நிலை காரணமாகவும் கறிக்கோழியின் விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கோழி வியாபாரிகளின் தரப்பினரே கூறுகின்றனர்.