மஹாராஷ்ட்ராவின் தானே மாவட்டத்தில் உள்ள வெஹ்லோலி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தீடிரென 100 கோழிகள் இறந்துள்ளன. இதன் காரணமாக பறவை காய்ச்சல் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இறந்த கோழிகளின் மாதிரிகள், புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோழிப்பண்ணையை சுற்றி, ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் இருக்கும் 25 ஆயிரம் பறவைகள் அடுத்த சில நாட்களில் கொல்லப்படும் என தானே மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் பறவை காய்ச்சல் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட கால்நடைத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தானேவின் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.