குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்துவருகிறது. பல இடங்களில் இந்த போராட்டங்கள் வன்முறையாகமாறி உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த போராட்டங்களில் நிகழ்ந்த வன்முறைகளை சாடும் வகையில் ராணுவ தளபதி மறைமுகமாக சாடியுள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத், "மக்களை தவறான பாதையில் வழிநடத்துபவர்கள் தலைவர்கள் அல்ல. ஏராளமான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் தலைமையேற்று நடத்தும் போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை நாம் பார்த்து வருகிறோம். இது சரியான தலைமை அல்ல" என தெரிவித்துள்ளார்.